Type Here to Get Search Results !

செல்லாத வாக்குகள் போட்ட அரசு ஊழியர்கள்


ஈரோடு  மக்களவை தொகுதியில் மொத்தம் 8 ஆயிரத்து 852 தபால் வாக்குகளுக்கான  விண்ணப்பம் வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பம் பெற்றவர்கள், தங்கள் வாக்குகளை  பதிவு செய்து பயிற்சியின்போது அதற்கான பெட்டியிலும், மற்றவர்கள் தபால்  மூலமாகவும் அனுப்பினர்.இதில், 6,930 தபால் வாக்குகள் பதிவாகி  இருந்தது. தபால் வாக்கில் 5,691 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக  அறிவிக்கப்பட்டது. 1140 வாக்குகள் பல்வேறு காரணங்களால் செல்லாத வாக்குகளாக  அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், `தபால்  வாக்கு படிவத்தில் வாக்களிக்கும்போது `டிக்’ செய்தால் போதுமானது. ஆனால்,  ஒரு சிலர் `டிக்’ செய்யும் போது அருகில் இருந்த மற்றொரு சின்னத்திலும்  படும்படி `டிக்’ செய்துள்ளனர். இதேபோல், உரிய ஆவணங்கள் இணைக்காமல் அனுப்பி  வைத்தது போன்ற காரணங்களால் செல்லாத வாக்குகளாக கருதி 1140 வாக்குகள்  நிராகரிக்கப்பட்டது’ என்றனர்.


Top Post Ad

Below Post Ad