Type Here to Get Search Results !

காரில் பயணம் போறீங்களா? : FASTag வாங்கிருங்க – இல்லைன்னா இரண்டு மடங்கா வருத்தப்படுவீங்க…. FASTag என்றால் என்ன? முழு விவரம்...



தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில், டிசம்பர் 1ம் தேதி முதல் FASTag முறை அமல்படுத்தப்பட உள்ளது.

FASTag வசதி இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு அளவுக்கு டோல் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் அதே சமயம் வாகனங்கள், டோல்கேட்களை எளிதாகவும் அதேநேரம் விரைவாகவும் கடந்து செல்லும் பொருட்டு, ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான FASTag சேவை, கடந்த 2014ம் ஆண்டில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக, டோல்கேட்களில், எலெக்ட்ரானிக் டோல் கலெக்சன் கேட்கள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள டோல்கேட்களில் FASTag முறையினை இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FASTag என்றால் என்ன?

FASTag என்பது ப்ரீபெய்டு முறையிலான ரீசார்ஜ் செய்துகொள்ளத்தக்க அட்டை ஆகும். இந்திய டோல்கேட்களில், எலெக்ட்ரானிக் அடிப்படையிலான டோல் கட்டணத்தை செலுத்தும் பொருட்டு, நேசனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, இந்த FASTag முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
FASTagயை, நமது வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் பொருத்த வேண்டும். டோல்கேட்டை, நமது வாகனம் கடந்து செல்லும்போது, ரேடியோ அலைவரிசை அடிப்படையிலான FASTag, மூலம், அதற்குரிய கட்டணம், நாம் இணைத்துள்ள வங்கிக்கணக்கின் மூலமாகவோ, அல்லது ப்ரீபெய்டு ரீசார்ஜ் மூலமான கட்டணத்தின் கழியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, நமது வாகனத்தை இயக்குபவர், டோல்கேட் பகுதியில் வாகனத்தை மெதுவாக செலுத்தவோ அல்லது நிறுத்த வேண்டிய அவசியமோ இல்லை. நாம் நமது பயணத்தை, எவ்வித தங்குதடையுமின்றி மகிழ்ச்சியாக மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

FASTagயை எவ்வாறு வாங்குவது மற்றும் ஆக்டிவேட் செய்வது?

FASTag, அமேசான் இணையதளம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளேஸ்டோரில் My FASTag என்று டைப் செய்து கிடைக்கும் செயலியை கொண்டும், FASTag பெறலாம். பின், அதனை, நாம் நம் வங்கிக்கணக்கு உடன் இணைக்க வேண்டும்.
நமது வாகனத்தின் பதிவு சான்றிதழின் ( RC) இரண்டு பக்கங்களையும், பேடிஎம் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றுவதன் மூலம், FASTag சேவையை பெறமுடியும்.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் பேமெண்ட் பேங்கின் மூலம், FASTag சேவையை பெறலாம். தங்களது நிறுவன வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஏர்டெல் நிறுவனம், ரூ.50 பண வெகுமதியை வழங்குகிறது.
ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கோடக் மகிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி உள்ளிட்ட 23 வங்கிகள், , FASTag சேவையை வழங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளன.
இதுமட்டுமல்லாது, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களிலும் இந்த , FASTag அட்டைகளை பெறலாம்.

FASTag எப்படி ரீசார்ஜ் செய்வது?

FASTag செயலியை உங்களது வங்கிக்கணக்குடன் இணைத்திருக்கும் பட்சத்தில், வங்கிக்கணக்கில் போதிய பணம் பராமரித்து வந்தால் போதும், தனியாக எந்த ரீசார்ஜ்ஜூம் செய்ய தேவையில்லை., FASTag ப்ரீபெய்ட் வேலட் உபயோகிக்கும் பட்சத்தில், நாம் கண்டிப்பாக போதிய அளவிற்கு ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். இல்லையெனில், டோல்கேட்களை நம்மால் கடந்து செல்ல இயலாது.

FASTag எவ்வாறு செயல்புரிகிறது?

நமது வாகனம், டோல்கேட்களில் உள்ள எலெக்ட்ரானிக் டோல் கலெக்சன் வழியை கடந்து செல்லும்போது, FASTag பயனாளரிடம் இருந்து பெறும் பணம் 4 முக்கிய நிலைகளை கடக்கிறது. அவையாவன : டோல்கேட், பணம் கொடுக்கும் வங்கி, நேசனல் எலெக்ட்ரானிக் டோல் கலெக்சன் மற்றும் பணம் வழங்குபவர் என 4 முக்கிய நிலைகளை கடந்து செல்கிறது.

நாம் எலெக்ட்ரானிக் டோல் கலெக்சன் வழியை கடக்கும்போது, நமது வங்கிக்கணக்கு அல்லது ப்ரீபெய்ட் வேலட்டில் இருந்து பெறப்படும் பணம், பெறுதல் அமைப்புக்கு (acquiring system) அனுப்பப்படுகிறது. அங்கு அவை மதிப்பீடு செய்யப்பட்டு, நேசனல் எலெக்ட்ரானிக் டோல் கலெக்சன் பிரிவிற்கு அனுப்பப்படுகிறது. நேசனல் எலெக்ட்ரானிக் டோல் கலெக்சன், பயனாளரிடமிருந்து பணத்தை பெற்று அதனை National Payments Corporation of India கணக்கில் வரவு வைக்கப்பட்டபிறகு நமக்கு டோல்கேட்டிலிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவையனைத்தும் சில விநாடிகளில் நடைபெறுவதால், நாம் டோல்கேட்டில் நிற்க வேண்டிய அவசியமில்லை.

பணம், நமது வங்கிக்கணக்கிலிருந்தோ அல்லது ப்ரீபெய்ட் வேலட்டில் இருந்து எடுக்கப்பட்ட பிறகு நமது எஸ்எம்எஸ் வருகிறது. இதே எஸ்எம்எஸ், என்டிசிஇ அமைப்பிற்கும் அனுப்பப்படுவதால், நாம் எளிதாக டோல்கேட்டை கடந்துசெல்ல முடிகிறது.


Top Post Ad

Below Post Ad