Type Here to Get Search Results !

நீலகிரி, கோவைக்கு ‘ரெட் அலர்ட்’- வானிலை மையம் அறிவிப்பு


வடகிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:- 
குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு இந்த பகுதி கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Top Post Ad

Below Post Ad