Type Here to Get Search Results !

Hitech ஆனது Aadhaar Card: நனையாது, கிழியாது.apply செய்யும் வழி இதோ...

ஆதார் அட்டையை மழையில் நனையாமல் பாதுகாப்பவும், கிழியாமலும், சேதப்படாமலும் பத்திரமாக வைக்கவும் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறோம். நம்மில் சிலர் அதை லேமினேட் செய்தும் வைத்துள்ளோம். மடிந்துவிடாமல் இருக்க பர்சில் வைப்பதையும் தவிர்க்கிறோம். ஆனால் இப்போது இப்படி எதையும் யோசிக்கத் தேவையில்லை. மாறும் காலத்தோடு ஈடுகட்ட ஆதார் அட்டையும் ஹைடெக் ஆகிவிட்டது. UIDAI இதை புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது ஆதார் அட்டை ATM Card-ஐப் போல கிடைக்கும்.

புதிய வடிவத்தில் ஆதார் அட்டை

இப்போது பி.வி.சி அட்டையில் ஆதார் அட்டையை (Aadhaar Card) மீண்டும் அச்சிடலாம் என்று UIDAI ட்வீட் செய்துள்ளது. இந்த அட்டையை உங்கள் ATM அல்லது டெபிட் கார்டைப் போலவே உங்கள் பணப்பையிலும் எளிதாக வைக்க முடியும். UIDAI ட்வீட் செய்து, "உங்கள் ஆதார் இப்போது ஒரு வசதியான அளவில் இருக்கும். அதை நீங்கள் எளிதாக உங்கள் பர்சில் வைக்க முடியும்." என்று கூறியது. இருப்பினும், இந்த ஹைடெக் ஆதார் அட்டையை உருவாக்க, நீங்கள் 50 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்

புதிய ஆதார் அட்டையில் என்ன சிறப்பு

எந்தவொரு கால நிலையிலும் ஆதார் பி.வி.சி அட்டை முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும். இனி ஆதார் அட்டை ஈரமாவது பற்றியோ, கிழிவது பற்றியோ, கசங்குவது பற்றியோ கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பி.வி.சி கார்டுகளின் வடிவத்தில் வரும் புதிய ஹைடெக் (Hitech) ஆதார் அட்டை உறுதியானது, தோற்றத்தில் கவர்ச்சியானது மற்றும் சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் ஹாலோகிராம்கள், கில்லோச் வடிவங்கள், கோஸ்ட் இமேஜ்கள் மற்றும் மைக்ரோடெக்ஸ்ட் ஆகியவை அடங்கும். ஆன்லைனில் ஆர்டர் செய்து Aadhaar PVC Card-களை பெற்றுக் கொள்ளலாம்.

புதிய Aadhaar PVC Card-ஐ எவ்வாறு பெறுவது

1. முதலில் நீங்கள் UIDAI வலைத்தளமான https://uidai.gov.in/ க்கு செல்ல வேண்டும்.

2. இங்கே, 'My Aadhaar' பகுதிக்குச் சென்று, 'Order Aadhaar PVC Card' என்பதைக் கிளிக் செய்ய வெண்டும்.

3. உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்

4. பாதுகாப்பு குறியீடு, கேப்ட்சாவை நிரப்பிய பிறகு, OTP ஐக் கிளிக் செய்க

5. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP தோன்றும், அதை உள்ளிடவும்

6. ஆதார் பி.வி.சி அட்டை முன்னோட்டம் உங்களுக்கு முன்னால் காணப்படும்.

7. இதற்குப் பிறகு, நீங்கள் பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து, ரூ .50 கட்டணம் செலுத்த வேண்டும்.

8. கட்டணம் செலுத்தப்பட்டவுடன் உங்கள் செயல்முறை முடிந்துவிடும். அதன் பிறகு புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் வீட்டிற்கு வரும்.

Top Post Ad

Below Post Ad