-->

Now Online

தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு


இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு - செயல் இழக்கச் செய்தபோது வெடித்து சிதறியது

உலக நாடுகளுக்கு இடையே கடந்த 1939ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை இரண்டாவது உலகப் போர் மூண்டது. இந்தப் போரின் போது தான் மனித வரலாற்றில் முதன் முறையாக அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. அதன் தாக்கம் இன்று வரை குறையாமல் இருப்பதோடு, மீண்டும் ஒரு அணு ஆயுதம் பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் உலக நாடுகள் கவனமாக இருந்து வருகின்றன. இதற்கிடையில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் பல்வேறு இடங்களில் அவ்வபோது கண்டெடுக்கப்படுகின்றன. அவற்றில் பல குண்டுகள் செயலிழந்த நிலையில் இருந்தாலும், சில குண்டுகள் இன்றும் வெடிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றன. அந்த வகையில் அண்மையில் போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது கடந்த 1945 ஆம் ஆண்டு பிரிட்டன் வீசிய டால்பாய் வெடிகுண்டு என்றும் அதன் எடை 5 ஆயிரத்து 400 கிலோ என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் பணியில் போலந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் எதிர்பாரதாக விதமாக நீருக்கடியில் வெடித்துச் சிதறியது. இதனால் தண்ணீர் மேல நீண்ட உயரத்திற்கு எழுந்தது. இருப்பினும் நீருக்கடியில் வெடித்ததில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை எனக் கூறியிருக்கும் அந்நாட்டு அதிகாரிகள், தற்போது ஆபத்து நீங்கியதாக தெரிவித்துள்ளனர்.
Source Dinathanthi

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்ததுநேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,920க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று ரூ.376 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று ரூ.19 குறைந்து ரூ.4,865க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 47 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,838-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hitech ஆனது Aadhaar Card: நனையாது, கிழியாது.apply செய்யும் வழி இதோ...

ஆதார் அட்டையை மழையில் நனையாமல் பாதுகாப்பவும், கிழியாமலும், சேதப்படாமலும் பத்திரமாக வைக்கவும் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறோம். நம்மில் சிலர் அதை லேமினேட் செய்தும் வைத்துள்ளோம். மடிந்துவிடாமல் இருக்க பர்சில் வைப்பதையும் தவிர்க்கிறோம். ஆனால் இப்போது இப்படி எதையும் யோசிக்கத் தேவையில்லை. மாறும் காலத்தோடு ஈடுகட்ட ஆதார் அட்டையும் ஹைடெக் ஆகிவிட்டது. UIDAI இதை புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது ஆதார் அட்டை ATM Card-ஐப் போல கிடைக்கும்.

புதிய வடிவத்தில் ஆதார் அட்டை

இப்போது பி.வி.சி அட்டையில் ஆதார் அட்டையை (Aadhaar Card) மீண்டும் அச்சிடலாம் என்று UIDAI ட்வீட் செய்துள்ளது. இந்த அட்டையை உங்கள் ATM அல்லது டெபிட் கார்டைப் போலவே உங்கள் பணப்பையிலும் எளிதாக வைக்க முடியும். UIDAI ட்வீட் செய்து, "உங்கள் ஆதார் இப்போது ஒரு வசதியான அளவில் இருக்கும். அதை நீங்கள் எளிதாக உங்கள் பர்சில் வைக்க முடியும்." என்று கூறியது. இருப்பினும், இந்த ஹைடெக் ஆதார் அட்டையை உருவாக்க, நீங்கள் 50 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்

புதிய ஆதார் அட்டையில் என்ன சிறப்பு

எந்தவொரு கால நிலையிலும் ஆதார் பி.வி.சி அட்டை முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும். இனி ஆதார் அட்டை ஈரமாவது பற்றியோ, கிழிவது பற்றியோ, கசங்குவது பற்றியோ கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பி.வி.சி கார்டுகளின் வடிவத்தில் வரும் புதிய ஹைடெக் (Hitech) ஆதார் அட்டை உறுதியானது, தோற்றத்தில் கவர்ச்சியானது மற்றும் சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் ஹாலோகிராம்கள், கில்லோச் வடிவங்கள், கோஸ்ட் இமேஜ்கள் மற்றும் மைக்ரோடெக்ஸ்ட் ஆகியவை அடங்கும். ஆன்லைனில் ஆர்டர் செய்து Aadhaar PVC Card-களை பெற்றுக் கொள்ளலாம்.

புதிய Aadhaar PVC Card-ஐ எவ்வாறு பெறுவது

1. முதலில் நீங்கள் UIDAI வலைத்தளமான https://uidai.gov.in/ க்கு செல்ல வேண்டும்.

2. இங்கே, 'My Aadhaar' பகுதிக்குச் சென்று, 'Order Aadhaar PVC Card' என்பதைக் கிளிக் செய்ய வெண்டும்.

3. உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்

4. பாதுகாப்பு குறியீடு, கேப்ட்சாவை நிரப்பிய பிறகு, OTP ஐக் கிளிக் செய்க

5. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP தோன்றும், அதை உள்ளிடவும்

6. ஆதார் பி.வி.சி அட்டை முன்னோட்டம் உங்களுக்கு முன்னால் காணப்படும்.

7. இதற்குப் பிறகு, நீங்கள் பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து, ரூ .50 கட்டணம் செலுத்த வேண்டும்.

8. கட்டணம் செலுத்தப்பட்டவுடன் உங்கள் செயல்முறை முடிந்துவிடும். அதன் பிறகு புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் வீட்டிற்கு வரும்.

தினம் ஒரு குட்டிக்கதை* .பால.ரமேஷ்👉 *தற்பெருமை*👈

குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார்.

அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், “சட்’டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான்.

அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், ஆற்றில் விழுந்த அவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்.
குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடனுக்கு, நன்றி தெரிவித்தனர்.

*இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது.*

பார்ப்பவர்களிடமெல்லாம், “ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன்.

இல்லாவிட்டால், இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார்’ என்று கூறத் தொடங்கினான்.

இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. *ஆனாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்*.

👉மறுநாள் குரு அதே சீடர்களை அழைத்துக் கொண்டு, அதே ஆற்றின் கரையோரம் நடந்து சென்றார்.

அன்று சம்பவம் நடந்த இடம் வந்ததும், முன்பு தன்னைக் காப்பாற்றிய சீடனிடம்,  " *என்னை ஆற்றில் தள்ளிவிடு!"என்றார்.*
அந்த சீடன் திகைத்தான்.””ம்! தள்ளு!” என்றார் குரு.

“”அது… வேண்டாம் குருவே!” என்றான் சீடன்.

“”இது குருவின் உத்தரவு. கேட்டு நடப்பது உன் கடமை. ம்… என்னை ஆற்றில் தள்ளு!” என்றார்.
மிரண்டுபோன சீடன் அவரை ஆற்றில் தள்ளி விட்டான்.

மற்ற சீடர்கள் என்ன நடக்கப்போகிறதோ? என்று திகிலுடன் பார்த்தனர்.  

👉ஆற்றில் விழுந்த குரு, எந்தவித பதட்டமும் படாமல், அமைதியாக நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்.
அதைப் பார்த்த சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.

*குரு கரை மேலே ஏறி வந்தார்.*
தள்ளிவிட்ட சீடனைப் பார்த்தார்.

" *இப்போதும் நீதான் என்னைக் காப்பாற்றினாயா? "என்று கேட்டார்*. அந்த சீடன் தலை குனிந்தான்.

👉 *ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது *மனிதாபிமானமுள்ள செயல்.*
ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!” என்றார் குரு.

தற்பெருமை கொண்ட சீடன், குருவிடம் மன்னிப்புக் கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக் கைவிட்டான்..

ஆம்,நண்பர்களே,
*“எனக்குத் தெரியும்” என்பதற்கும்,எனக்கு மட்டும்தான் தெரியும்” என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.*

எல்லாம் தெரிந்த மனிதனும் இல்லை, எதுவும் தெரியாத மனிதனும் இல்லை” என்ற உலக உண்மையை மறந்த மனிதன்தான்,
இந்த தற்பெருமை வலையில் விழுந்து அவமானப்படுகிறான்.

மனதில் ஏற்படக்கூடிய களங்கங்களில், *பிறருடைய வெற்றியைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாதிருப்பது ஒன்று.*

பொறாமை குணமே மிகவும் கொடியது.
வீண் கர்வம், பொறாமை, அகம்பாவம் என்பன ஓரினத்தைச் சேர்ந்தவை.

மனிதனுடைய உண்மையான இயல்பின் வேர்களை அவை வெட்டிவிடும்...

*நீங்கள் மலையாக இருப்பினும் மண் கும்பம் என உணர்வு கொள்ள வேண்டும்..!!*


சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி


இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களும், பரிசுகளும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு, பரிசுகளை வழங்குகிறது. ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையை சேர்ந்த மதுரேசன் என்னவர் வழக்கு தொடர்ந்தார். 
இந்த நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என கேள்வியெழுப்பினர். 

மேலும், 90 க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்ற மாற்று திறனாளிக்கு, பத்தாவது மட்டுமே படித்த காரணத்தால் அலுவலக உதவியாளர் பணி கொடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தனர்.
Source Dinathanthi

பிறப்பு, இறப்பு பதிவிற்கு ஆதார் கட்டாயம் அல்ல - இந்திய தலைமைப் பதிவாளர் விளக்கம்

     

பிறப்பு, இறப்பு பதிவிற்கு ஆதார் கட்டாயம் அல்ல என இந்திய தலைமைப் பதிவாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய தலைமைப் பதிவாளர், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி பதிலளித்துள்ளார்.

பிறப்பு, இறப்பு பதிவு செய்வோர் தாங்களாக முன்வந்து ஆதார் எண்ணை அளித்தாலும், அதை ஆவணங்களில் அச்சிடவோ மின்னணு வடிவில் சேமித்து வைக்கவோ கூடாது என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடலோர ஆந்திராவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 3 மாவட்டங்களில் கனமழை - 16 மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்


ஆந்திரக் கடற்கரை காக்கிநாடா அருகே கரையைக் கடந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடலோர ஆந்திராவில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழையும், 3 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
 “நேற்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை 7 மணி அளவில் ஆந்திரக் கடற்கரை காக்கிநாடா அருகே கரையைக் கடந்து, தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது.
 இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 
 நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
 அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 

 மீனவர்களுக்கான எச்சரிக்கை:
 அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
 கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
 மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,
 கடல் உயர் அலை முன்னறிவிப்பு:
 தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை அக்டோபர் 13 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 2.8 முதல் 3.8 மீட்டர்வரை எழும்பக்கூடும்”.
 இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
        

இரவு நேரத்தில் முட்டை சாப்பிடலாமா?

குறைந்த விலையில் அதிக ஊட்டச்சத்துள்ள ஓர் உணவு முட்டை. அனைவரின் உணவுப் பட்டியலிலும் தவறாது இடம்பெற வேண்டிய முக்கிய உணவு. வளரும் குழந்தைகளுக்குத் தினசரி ஒரு முட்டை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முட்டை பற்றி ஏராளமான சர்ச்சைகள். முட்டை சைவமா, அசைவமா என்பதில் தொடங்கி, பிளாஸ்டிக் முட்டை வரை.

இந்தச் சர்ச்சைகளைக் கடந்து முட்டையைப் பற்றி ஏகப்பட்ட சந்தேகங்கள். அவிக்காத முட்டையைச் சாப்பிடலாமா, இரவு நேரத்தில் முட்டை சாப்பிடலாமா, சமைத்த பிறகு எவ்வளவு நேரத்துக்குள் முட்டையைச் சாப்பிட வேண்டும்? இப்படியான எல்லாக் கேள்விகளுக்கும் விரிவாகப் பதில் அளிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.

நாம் சாப்பிடும் சாதாரண கோழி முட்டையில் நமக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் `உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்று’ என்கிற முக்கியமான இடத்தை முட்டைக்குக் கொடுத்து வைத்திருக்கிறார்கள். 40 முதல் 50 கிராம் எடை கொண்ட ஒரு முட்டையில், 187 மில்லிகிராம் கொழுப்புச்சத்து உள்ளது. சாதாரணமாக ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்குத் தேவையான கொழுப்புச்சத்தின் அளவு 300 மில்லிகிராம்தான். இரண்டு முட்டைகள் அந்தக் கொழுப்புச்சத்தின் தேவையைப் பூர்த்தி செய்துவிடும். 78 கலோரிகள் கொண்ட ஒரு முட்டையில் 6.6 கிராம் புரதச்சத்து இருக்கிறது. குறிப்பாக, நாட்டுக்கோழி முட்டையில் ரிபோஃப்ளேவின், பயோடின் வைட்டமின்கள் பி2, பி6, பி12, ஏ, டி ஆகியவையும் செலினியம், துத்தநாகம், இரும்பு, காப்பர், அயோடின் போன்ற கனிமச்சத்துகளும் இருக்கின்றன.

முட்டையில் உள்ள லூட்டீன் (Lutein) மற்றும் சியாக்ஸாந்தின் (Zeaxanthin), கோலின் (Choline) போன்ற சத்துகள் நமக்குப் பல வழிகளில் உதவுபவை. இவை கண்புரை, விழித்திரையில் ஏற்படும் மாகுலர் டீஜெனரேஷன் (Macular degeneration) பாதிப்பு மற்றும் மூளை வளர்ச்சிப் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுபவை. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற சத்துகள் முட்டையில் நிறைவாக இருக்கின்றன. இவை உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்க உதவும். முட்டையில் உள்ள லியூசின் (Leucine) என்ற அமினோ அமிலம், தசைகளுக்கிடையே உள்ள புரதச்சத்தை (Muscle Protein Synthesis) மேம்படுத்தி, அவை வலுப்பெற உதவும்.

முட்டையிலிருக்கும் கோலின் (Choline) சத்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியது. கருவுற்ற தாய்மார்கள் முட்டை சாப்பிட்டால், வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தை, மூளை தொடர்பான எந்தக் குறைபாடும் இல்லாமல் பிறக்கும். முட்டையிலிருக்கும் ஃபோலிக் அமிலம், வயிற்றில் வளரும் குழந்தையின் நரம்புகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உதவும். பொதுவாகவே வளரும் குழந்தைகள், தினமும் ஒரு முட்டையைப் பாலுடன் சாப்பிடுவது அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது.

அதிக எடையோடு இருப்பவர்கள், உடலில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை முட்டை சாப்பிட்டால் போதுமானது. ஆனால், அவர்களும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைத் தவிர்த்துவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. அதிலும் பிராய்லர் கோழி முட்டைகளைவிட நாட்டுக்கோழி முட்டைகளே சிறந்தவை.

முட்டையைச் சப்பாத்தி ரோலாகவோ பொரியலாகச் செய்து சாதத்துடன் கலந்தோ சாப்பிடலாம். முட்டை கிரேவியாக அல்லது காய்கறிகளுடன் கலந்தும் சாப்பிடலாம். ஆம்லெட்டாகச் செய்து உட்கொள்ளலாம். ஆனால், முட்டையைப் பச்சையாகவோ, அரை வேக்காடாகவோ, வேகாத மஞ்சள் கருவாகவோ உட்கொள்ளக் கூடாது.

சிலருக்கு மாலை வேளையில் முட்டை பப்ஸ் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இந்த முட்டை பப்ஸ் விஷயத்தில் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். சில கடைகளில் காலையில் செய்த பப்ஸையே மாலை வரை வைத்திருந்து விற்பார்கள். அந்த பப்ஸில் இருக்கும் முட்டை மாலைக்குள் நிச்சயம் கெட்டுப்போய், சாப்பிடத் தகாததாக ஆகியிருக்கும். எனவே, ஆரோக்கியம் காக்க விரும்புகிறவர்கள் கடைகளில் விற்கப்படும் முட்டை பப்ஸை பார்த்து சாப்பிடுவது நல்லது.

அதேபோலக் கடைகளில் விற்கப்படும் பிரியாணியுடன் அவித்த முட்டைகள் பரிமாறப்படும். அந்த முட்டைகள் எப்போது சமைக்கப்பட்டவை என்பதைத் தெரிந்துகொண்டு சாப்பிட வேண்டும். காலையில் சமைக்கப்பட்டு, மதியம் / இரவு என நேரம் கடந்து பரிமாறப்படும் முட்டைகள் நம் உடலுக்குக் கெடுதலைத்தான் கொண்டுவந்து சேர்க்கும்.

சிலர், கிரேவியாகவோ குழம்பாகவோ முட்டையைச் சாப்பிடுவார்கள். முட்டை சமைக்கப்பட்ட நேரத்துக்கும் சாப்பிடப்போகும் நேரத்துக்கும் நடுவே அதிக இடைவெளி இருக்கக் கூடாது. இதை மஞ்சள் கருவோடு சேர்த்துச் சாப்பிடுபவர்கள் வாரத்துக்கு இரண்டு முறைக்கு மேல் சாப்பிட வேண்டாம்.

கருவுற்றிருக்கும் பெண்கள், முட்டை சூப், அவித்த முட்டை, முட்டைத் துருவல் என உட்கொள்ளலாம். ஆஃப் பாயிலுக்குக் கண்டிப்பாக `நோ’ சொல்லிவிட வேண்டும். ஆஃப் பாயில் சாப்பிடும் பெண்களின் குழந்தைகளுக்கு சால்மோனெல்லா (Salmonella) போன்ற பாக்டீரியா பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு... கவனம்!

வயதானவர்கள் வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை தினமும் ஒருமுறை சாப்பிடலாம். மஞ்சள் கரு சாப்பிடும் முதியவர்கள் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை சாப்பிட்டால் போதும். கிரேவி, ஆம்லெட், பொரியல் எனச் செய்து சாப்பிடும் முதியோர் அதில் எண்ணெயைக் குறைவாகச் சேர்க்க வேண்டும். அதிலும் இதயம் தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், வேறு ஏதும் உடல் பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி முட்டையைச் சாப்பிடுவது நல்லது.

`முட்டையைத் தயிர் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது’ என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால் புரோட்டா, பீட்சா, பப்ஸ் போன்ற மைதாவில் செய்த உணவுகளைச் சாப்பிடும்போது முட்டை சாப்பிடக் கூடாது. கடினமான உடற்பயிற்சி செய்பவர்களைத் தவிர மற்றவர்கள் பச்சையாக முட்டையைச் சாப்பிடக் கூடாது. தொடர்ந்து பச்சை முட்டை சாப்பிடுபவர்களுக்கு பயோட்டின் (வைட்டமின்-பி) குறைபாடு வருவதற்கான வாய்ப்பு அதிகம். சிலர் வளரும் குழந்தைகளுக்குப் பாலுடன் பச்சை முட்டையைச் சேர்த்துக் கொடுப்பார்கள். அதுவும் தவறே.

பெண்களில் சிலர் மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு, கால்சியம் தேவைக்காகத் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவார்கள். அது சரியல்ல. இத்தகைய சூழலில் அவித்தோ, கிரேவியாகவோ, குழம்பாகவோ முட்டையைச் சாப்பிட்டாலும் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். அதாவது, இதன்மூலமாக உடலில் கொழுப்பு அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால், தினமும் சாப்பிடாமல் வாரத்துக்கு இரண்டுமுறை உட்கொள்ளலாம். முட்டை சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி, அதன் காரணமாக இதய பாதிப்புகள் ஏற்படலாம் என்று சொல்லப்படுவதுண்டு. ஏற்கெனவே இதயத்தில் பாதிப்புள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். `ஹெச்.டி.எல்’ எனப்படும் நல்ல கொழுப்பின் அளவைத்தான் முட்டை மேம்படுத்தும் என்பதால், பயப்படத் தேவையில்லை.

சாப்பிடும் நேரம் மிகவும் முக்கியமானது. காலை நேரத்தில் முட்டை உட்கொள்வது சிறந்தது. மதியம் உட்கொள்பவர்கள், அது சமைக்கப்பட்ட நேரத்தை அறிந்துகொண்டு சாப்பிட வேண்டும். சமைத்து வெகு நேரமான முட்டையைச் சாப்பிடாமல் இருப்பதே நல்லது. இரவில் சாப்பிட்ட பிறகு, நம் உடல் உழைப்பு மிகவும் குறைவாக இருக்கும். எனவே, இரவில் முட்டை சாப்பிடுவதை முடிந்தளவு தவிர்த்துவிடலாம்.

முட்டையை 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைப்பது தவறு. அளவுக்கு அதிகமாக வேகவைத்தால் முட்டையில் பிரவுன் மற்றும் சாம்பல் நிறத்தில் ஒரு படிவம் படிந்துவிடும். அந்த முட்டைகளை உட்கொள்ளக் கூடாது. முட்டையை 7 நிமிடங்கள் வரை வேகவைத்தாலே போதுமானது.

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலில் அதிகளவில் கொழுப்புச்சத்து சேர்ந்துவிடும் என்கிற பயம் பலருக்கும் இருக்கிறது. அப்படிச் சாப்பிட விரும்புகிறவர்கள், முதலில் உடலில் இருக்கும் கொழுப்புச்சத்து அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக ஒருவருக்குக் கொழுப்புச்சத்து, 200 மி.கி/டி.எல் (mg/dl - milligrams per deciliter) வரைதான் இருக்க வேண்டும். 200-230 மி.கி/டி.எல் இருப்பது ஆபத்து. 250 மி.கி/டி.எல்-க்குமேல் இருக்கிறது என்றால், நீங்கள் எடுத்துக்கொள்ளும் மிகக் குறைந்த அளவு கொழுப்புச்சத்துள்ள ஆகாரம்கூட ஆபத்தை விளைவித்துவிடும். உடலின் கொழுப்புச்சத்தில், 85 சதவிகிதத்தைக் கல்லீரல்தான் உற்பத்திசெய்கிறது. உணவுகளிலிருந்து கிடைக்கும் கொழுப்புச்சத்து அளவு, 15 சதவிகிதம் மட்டுமே. இது அதிகமாகும்போது, உடலின் மொத்தக் கொழுப்புச்சத்தும் அதிகமாகிவிடும்


தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்க கடல் பகுதியில் உருவான காற்றத்தழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.